அத்தியாவசிய பொருள்களின் விலைகள் அதிகரிக்குமா? - வெளிவந்த அறிவிப்பு
நாட்டில் பால்மா , சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் மகிந்த தலைமையில் வாழ்க்கைச் செலவு குமு இன்று கூடி ஆராய்ந்துள்ளது.
இந்த தகவலை நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிப்பது குறித்து மிக ஆழமாக ஆராயப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கலந்துரையாடலில் நிதி அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு, பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை இல்லாது செய்வது தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஆராயப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை கூட்டத்தில் இந்த பரிந்துரைகளுக்கு அனுமதி கிடைத்ததன் பின்னர், இறுதித் தீர்மானம் எட்டப்படும் என அவர் குறிப்பிட்டார்.