அரச பாடசாலைகள் அடுத்த வாரம் முதல் முழுமையாக செயற்படவுள்ளன: கல்வி அமைச்சா் அறிவிப்பு
srilanka
school
budget
parliament
dinesh gunawardane
By Amal
அரச பாடசாலைகளில் எஞ்சியுள்ள அனைத்து தரங்களையும் அடுத்த வாரம் முதல் மீண்டும் திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், 2022 இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்தார்.
தற்போது, ஆரம்பப் பாடசாலைகள், ஆரம்பப் பிரிவுகள் மற்றும் உயர்தர மற்றும் சாதாரண தர வகுப்புகளில் மாணவர்களுக்காக நேரடியான கல்வி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தநிலையில் பல மாதங்கள் மூடப்பட்ட, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் அடுத்த வாரம் முதல் முழுமையாக செயல்படும் என்று அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.