அரசின் முயற்சிகள் தோற்கடிக்கப்படும் -தேரர் சூளுரை
நாட்டில் தேசிய வளங்களைப் பாதுகாக்கும் தேசிய வளங்களை நேசிக்கும் தலைவர்கள் இருக்க வேண்டும், ஆனால் இன்று அத்தகைய தலைவர்கள் இல்லை என்பது துயரமானது என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
திருமதி பண்டாரநாயக்கவிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அனைத்து தலைவர்களும் நாட்டின் வளத்தின் ஒரு பகுதியை இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு விற்றதாக குணவன்ச தேரர் குறிப்பிட்டார்.
எம்சிசி ஒப்பந்தத்தை கிழித்தெறிவதாக உறுதியளித்த தற்போதைய அரசாங்கம் இப்போது உடன்படிக்கையை பகுதிகளாகச் செயல்படுத்துவதாகவும், யுகதானவி மின் நிலையம் அதே ஒப்பந்தத்தின் ஒரு பகுதி என்றும் எல்லே குணவன்ச தேரர் சுட்டிக்காட்டுகிறார்.
ஒப்பந்தம் ஒரு பெயரில் அல்லது மற்றொரு பெயரில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
இது தொடர்பாக சட்டத்துறையுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அரசின் முயற்சிகள் எப்படியாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.