அரச ஊழியர்களின் சம்பளம் - ஓய்வூதியம் தொடர்பில் ரணில் வெளியிட்ட புதிய அறிவிப்பு
அரசு
அரச ஊழியர்களுக்கு சம்பளத்தையும், வட்டியையும் செலுத்துவதில் இந்தப் பட்ஜெட்டில் பெரும் பங்கு இருக்கிறது என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அதிபர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது, அரசு சேவையின் செலவுகளையும் வீண் விரயத்தையும் குறைக்க இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஏதாவது திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
சம்பளம் - ஓய்வூதியம்
இதற்கு தொடர்ந்தும் பதிலளித்த அதிபர், அரச ஊழியர்களுக்கு சம்பளத்தையும், வட்டியையும் செலுத்துவதில் இந்தப் பட்ஜெட்டில் பெரும் பங்கு இருக்கிறது.
உண்மையில் அதுபெரும் சுமைதான். எதிர்காலத்தில், ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அதிகரித்து அவர்களுக்கு எப்படி பணம் செலுத்துவது என்று கூட யோசிக்காமல், அவர்கள் உழைத்துள்ளனர்.
தேவையில்லாமல் அரச பணியில் ஆட்களை நியமித்ததில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. 2035க்குப் பின்னர் இவர்களுக்கு ஓய்வூதியம் செலுத்துவது பெரிய பிரச்சினையாகிவிடும்.
இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான முறையான தீர்வு எங்களிடம் உள்ளது.
அதற்கான கொள்கை இந்த ஆண்டு பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.