அரச ஊழியர்களின் பணி நீக்கம் - அநுர அரசின் நிலைப்பாடு
அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் மாறாக உற்பத்தி மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
அரச வருமானத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கையாக அரச சேவையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன (Chandana Abayarathna) இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அரசசேவையில் ஆட்சேர்ப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், பணி நீக்கம் என்பது வேலை வாய்ப்பில் இன்னொரு நெருக்கடியை ஏற்படுத்துமே தவிர அதனால் தீர்வு எதுவும் ஏற்படாது.
அதேநேரம் எதிர்காலத்தில் அரசசேவையில் ஆட்சேர்ப்பு செய்யூம் போது உற்பத்தி திறன் கவனிக்கப்படும் என்றும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் வெவ்வேறு அரசாங்கங்களின் கீழ் உற்பத்தித்திறன் அம்சத்தில் கவனம் செலுத்தாமல் தற்காலிக முறையில் பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ஆட்சேர்ப்பு செய்தன. அது எதிர்காலத்தில் சரி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |