அரச ஊழியர்கள் - ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான சுற்றறிக்கை
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள முற்பணம், சம்பளம், மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான திகதிகளை நிதி அமைச்சு (Ministry of Finance) வெளியிட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கை நிதி அமைச்சினால் நேற்று (07.12.2024) வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், சுற்றறிக்கையில் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை நிதி வழங்கள் தொடர்பான திகதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை
குறித்த சுற்றறிக்கையில் அரச உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பொது சேவையில் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் மாறாக உற்பத்தியை மேம்படுத்துவது அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.
அரச வருமானத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கையாக அரச சேவையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (யூரெசய முரஅயசய னுளைளயயெலயமந) கடந்த (21) நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை பார்வையிட இங்கு Click செய்யவும் - https://www.treasury.gov.lk/api/file/db48f877-5968-4800-9d8e-d67063871542செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |