அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கண்டம்
எமது அரசாங்க ஆட்சியில் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை 24 வீதத்தினால் அதிகரிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அரச ஊழியர்களின் சம்பளங்களை ஆறு மாதங்களில் அதிகரிப்பதாக தற்போதைய அரசாங்கம் முன்னதாக கூறிய போதிலும் தற்பொழுது அவ்வாறு செய்ய முடியாது என கூறியுள்ளது.
தேர்தல் பிரசார மேடைகளில் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை சம்பளங்களை உயர்த்துவதாக தேசிய மக்கள் சக்தி கூறிய போதிலும் தற்பொழுது சம்பளம் அதிகரிக்க முடியாது என கூறி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த முன்னாள் அரசாங்கத்தின் பிரேரணை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) அண்மையில் தெரிவித்த கருத்து பொய்யானது மற்றும் தவறானது என முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) குற்றம் சுமத்தியுள்ளார்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வை வழங்குவதற்கு ரணில் விக்ரமசிங்கவின் முன்னைய அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எக்ஸ் (x) தளத்தில் இன்று (28.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குழுவின் பரிந்துரைகள்
சம்பள உயர்வுகளை மதிப்பீடு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஓகஸ்ட் 2024 இல் அங்கீகரிக்கப்பட்டது.
The statement made by Prime Minister @Dr_HariniA is false and misleading on the state sector salary’s.
— Kanchana Wijesekera (@kanchana_wij) October 29, 2024
The previous Govt of @RW_SRILANKA took all the necessary steps in accordance with the procedures to approve the salary increments for the state sector employees from January… pic.twitter.com/ek64gXM4cM
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளில் பரிந்துரைகளை இணைத்து தேவையான நிதியை ஒதுக்குவதற்கு 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
திறைசேரி, வரவு செலவுத் திணைக்களம், முகாமைத்துவ சேவைகள் மற்றும் ஏனைய தேவையான பங்குதாரர்களின் அதிகாரிகளை இந்தக் குழு உள்ளடக்கியதாக காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை அறிவித்திருந்த போதிலும், அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய அண்மையில் கூறியிருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |