நாட்டில் எற்படப்போகும் பஞ்சத்தை தடுப்பதற்கான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை : ரில்வின் சில்வா
Srilanka
Government
Tilvin Silva
By MKkamshan
முன்னர் நாட்டை ஆட்சி செய்தவர்கள், ஆட்சியதிகாரத்தில் உயர் பதவிகளை வகித்தவர்களுடன் ஒன்றாக இணைந்து நாட்டை கட்டியெழுப்பு முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், அடுத்த வருடம் நாட்டு மக்களுக்கு உணவுக்கு வழியில்லாத நிலையொன்று ஏற்படப்போவது நன்கு தெரிகிறது. எனினும் இதனை தடுப்பதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு வேலைத்திட்டங்களும் இல்லை என்றார்.
அடுத்த வருடம் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கண்டிப்பாக வரும். இதனால் மின்சாரத் தடைகள் ஏற்படும் என கூறினார்.
தேர்தல்காலங்களில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக திருட்டுக் கூட்டணிகளை அமைத்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி