அரசாங்கத்திற்குள் என்ன நடக்கிறது - குழப்பத்தில் ஆளும் தரப்பு எம்.பி
goverment
failure
Anura Priyadharshana Yapa
By Jaso
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு பதவியையும் வகிக்கும் எண்ணம் தமக்கு இல்லை எனவும், தமக்கு வழங்கப்படும் எந்தவொரு பதவியையும் நிராகரிப்பதாகவும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா(Anura Priyadharshana Yapa) தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அமைச்சரவையில் கூட போதியளவு விவாதிக்கப்படுவதில்லை எனவும் அமைச்சரவை முற்றாக தோல்வியடைந்துள்ளதாகவும் உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமக்கு எதுவுமே தெரியாது எனவும் இன்னும் மௌனமாக உள்ளதாகவும் அனுர பிரியதர்சன யாப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்குள் என்ன நடக்கிறது என்று தனக்கு புரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.