சவால்களைக் கண்டு பின்வாங்கப் போவதில்லை - அரசாங்கம் திட்டவட்டம்
government
Johnston Fernando
back down-
By Vanan
சுபீட்சமான எதிர்காலக் கொள்கை திட்டத்திட்டத்தை தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றுவோம் என நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ (Johnston Fernando) தெரிவித்தார்.
வீரகெடிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற 1500 வீதிகளை மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
““நாம் சவால்களைக் கண்டு ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. கொவிட் தாக்கத்திற்கு மத்தியிலும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்போம்.
ஆனால், நல்லதைச் செய்தாலும் விமர்சிக்கும் பலவீமான எதிர்க்கட்சியினரே தற்போது உள்ளனர்.
விமர்சனங்களுக்கு மத்தியிலும் நாம் அபிவிருத்திப் பணிகளை தொடர்வோம்“ என்றார்.