மக்களை சட்ட நெருக்கடிக்குட்படுத்துகிறது அரசு! சந்திரகுமார் சீற்றம்

Sri Lankan Tamils Parliament of Sri Lanka Sri Lanka Politician Sri Lanka Economic Crisis
By Kiruththikan May 09, 2022 03:28 AM GMT
Report

அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் மீண்டும் பிறப்பித்திருப்பது நாட்டுக்கு தீங்கையே விளைவிக்கும். மேலும் நெருக்கடியை அதிகரித்து, நிலைமையை மோசமாக்கும். ஆகவே உடனடியாகவே அரச தலைவர் அவசரகாலச் சட்டத்தை ரத்துச் செய்து நீக்க வேண்டும்  என சமத்தவக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

முருகேசு சந்திரகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இன்று நாட்டுக்குத் தேவையானது, சுமை குறைப்பே தவிர, சுமை கூட்டுதல் அல்ல. மக்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் அரசியல் நெருக்கடியிலிருந்தும் மீள்வதற்கே - விடுபடுவதற்கே விரும்புகிறார்கள். அதையே அரசாங்கம் செய்ய வேண்டும்.

மக்களை சட்ட நெருக்கடிக்குட்படுத்துகிறது அரசு! சந்திரகுமார் சீற்றம் | Government People Legal Crisis Chandrakumar

மக்களுக்கு இன்று பெட்ரோலும் டீசலும் எரிவாயுவும் உணவுப்பொருட்களுமே தேவை. இதனோடு தமது நெருக்கடிகளைத் தீர்த்து நல் வாழ்வுக்கு உதவக்கூடிய ஆட்சியையே அவர்கள் விரும்புகிறார்கள். அவற்றை வழங்குவதற்குப் பதிலாக அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் வழங்குகிறது.

இது அரசாங்கத்தின் இயலாமையையே காட்டுகிறது. மக்களுக்குத் தேவையானதை வழங்குவதற்குப் பதிலாக மக்களுக்குத் தேவையில்லாத, மக்கள் விரும்பாத அவசரகாலச் சட்டத்தை - அரசாங்கம் திணிக்க முயற்சிப்பது தவறானதாகும்.

பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை சட்டத்தினாலும் நெருக்கடிக்குட்படுத்துவது நியாயமற்றது.

அவசரகாலச் சட்டத்தை மக்கள் விரும்பவில்லை. மக்கள் மட்டுமல்ல, இந்த நாட்டிலுள்ள அரசியற் கட்சிகள் தொடக்கம் சர்வதேச சமூகம் வரை எவருமே விரும்பவில்லை.

மக்களை சட்ட நெருக்கடிக்குட்படுத்துகிறது அரசு! சந்திரகுமார் சீற்றம் | Government People Legal Crisis Chandrakumar

அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பிப்பதன் மூலம் நாடும் அந்தக் காலகட்டமும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவதே உலக அனுபவமாகும். இதனால்தான் உலகம் இன்று அவசரகாலச் சட்டத்துக்கு எதிராக நிற்கிறது.

இந்த உலக அனுபவத்தையும் இலங்கையின் கடந்த கால அனுபவங்களையும் புறக்கணித்து விட்டு, மக்களுக்கு எதிரான சட்டத்தை அரசாங்கம் பிடிவாதமாக திணித்திருப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்