நெடுஞ்சாலையின் 3ஆம் கட்ட கட்டுமானம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டத்தை அடுத்த ஆண்டளவில் (2025) முடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் தொடர்பிலான விசேட கண்காணிப்பு விஜயத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
பொத்துஹெர, லிஹினிகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள திட்ட அலுவலகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பான விசேட விளக்கக்காட்சியில் கலந்துகொண்டார், இதில் திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் கட்டுமான நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பொருளாதார நிலை
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டத்தின் மொத்த தூரம் 32.45 கிலோமீட்டர்கள் ஆகும், இது பொத்துஹெர, பொல்கஹவெல, ரம்புக்கன மற்றும் கலகெதர போன்ற நான்கு பரிமாற்றங்களை உள்ளடக்கியது, இந்த வீதி, மற்றும் பரிமாற்ற கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் அரசு செயற்படுத்தி வரும் பொருளாதார வேலைத்திட்டம் குறித்து அதிகாரிகள் மற்றும் கட்டடம் கட்டுபவர்களுக்கு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
"சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படியே இந்த கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் நாட்டில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும்." என்றும் அமைச்சர் கூறியிருந்தார்.
நிர்மாணப் பணிகள்
உள்ளூர் கட்டுமான நிறுவனங்கள் ஏற்கனவே செய்துகொண்ட 17 ஒப்பந்தங்களின் கீழ் இந்த கட்டத்திற்கான கட்டுமானப் பணிகளில் பொதுஹெர முதல் ரம்புக்கனை வரை ஈடுபட்டு வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
இதன் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் மீரிகம முதல் ரம்புக்கனை வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையை மக்கள் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |