வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

Sri Lankan Tamils Jaffna Sri Lanka Floods In Sri Lanka
By Theepan Dec 07, 2025 02:03 AM GMT
Report

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் எவ்விதமான முறைகேடுகளுக்கோ மற்றும் பாரபட்சங்களுக்கோ அல்லது ஊழலுக்கோ இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைய நாட்களில் உதவித்தொகை வழங்கல் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் அவர்  நேற்று (06) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிவாரணம்: வெளியான தகவல்

கிளிநொச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிவாரணம்: வெளியான தகவல்

உதவித்தொகை 

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜனநாயகக் கட்டமைப்பில் அரச செயற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுவதையும் மற்றும் விழிப்புடன் இருப்பதையும் நாம் வரவேற்கின்றோம்.

ஆனால் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்கள் மத்தியில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பது சமூகப் பொறுப்புள்ள அனைவரதும் கடமையாகும்.

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி | Government Relief Allowance North Province Jaffna

உதவித்தொகை வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருடன் விரிவாகக் கலந்துரையாடினேன்.

அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு அமையவே பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் கிராமமட்ட ஏனைய அலுவலர்கள் ஊடாகத் தெரிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மிகவும் ஆபத்தான பாதையில் நகரும் இஸ்ரேல்: மொசாட் உளவாளிகள் கூறும் அதிர்ச்சித் தகவல்

மிகவும் ஆபத்தான பாதையில் நகரும் இஸ்ரேல்: மொசாட் உளவாளிகள் கூறும் அதிர்ச்சித் தகவல்

இரகசியத் தன்மை

இதில் எவ்வித இரகசியத் தன்மையும் இல்லை, உதவித்தொகை பெறத் தகுதியானவர்களின் பெயர்ப்பட்டியல் அந்தந்தப் பகுதிகளில் பகிரங்கமாகத் காட்சிப்படுத்தப்படும் என்பதோடு இதனை மாவட்டச் செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனவே, தகுதியான எவரும் விடுபடவோ, தகுதியற்ற எவரும் உள்நுழைவதற்கோ இதில் வாய்ப்புகள் இல்லை.

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி | Government Relief Allowance North Province Jaffna

மிக முக்கியமாக மக்களுக்கான உதவித்தொகை இன்னமும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவில்லை அவ்வாறு பணம் வைப்பிலிடப்படும் முன்னரே முறைகேடுகள் நடந்துவிட்டதாக அரைகுறைத் தகவல்களைக் கொண்டு பரப்பப்படும் செய்திகள் அடிப்படையற்றவை.

தெரிவுப் பட்டியல்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னரே கொடுப்பனவுகள் இடம்பெறும் என்பதால் பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பி அச்சமடையத் தேவையில்லை.

பிரான்ஸில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் புகுந்த கார்: பலியான மக்கள்

பிரான்ஸில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் புகுந்த கார்: பலியான மக்கள்

பிரதான இலக்கு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கத்தின் பிரதான இலக்கு, அரச இயந்திரத்தில் புரையோடிப்போயிருந்த ஊழலை ஒழிப்பதேயாகும் எனவே மக்களின் கண்ணீரில் இலாபம் தேடும் ஈனச் செயலுக்கோ அல்லது முறைகேடுகளுக்கோ இனி இடமில்லை.

நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது அவர் எந்த நிலையிலிருந்தாலும் தவறிழைத்தாலோ மற்றும் ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது பாரபட்சம் காட்டினாலோ அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை.

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி | Government Relief Allowance North Province Jaffna

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கடந்து முறைகேடுகள் தொடர்பில் யாரிடமேனும் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அதனை எனது கவனத்துக்கு நேரடியாகக் கொண்டு வரலாம்.

ஆதாரபூர்வமான முறைப்பாடுகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் அத்தோடு அரச இயந்திரம் மக்களுக்காகவே இயங்குகின்றது, இந்த இக்கட்டான நேரத்தில் அகாழ்ப்புணர்ச்சிகளைத் தவிர்த்து நேர்மையுடனும் மனிதாபிமானத்துடனும் ஒன்றிணைந்து எமது மக்களை மீட்டெடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

யாழ் குடும்பஸ்தருக்கு லண்டனில் இடம்பெற்ற கொடூரம்...!

யாழ் குடும்பஸ்தருக்கு லண்டனில் இடம்பெற்ற கொடூரம்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி