அரச ஊழியர்களுக்கு பேரிடி..! அநுர அரசில் கனவான சம்பள அதிகரிப்பு
அநுர அரசில் இன்று அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்பது கனவாகிவிட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே நிமல் லன்சா (Nimal Lanza) மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், சந்தையில் பொருட்களின் விலையேற்றத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை
தற்போதைய அரசாங்கம் அதனை கட்டுப்படுத்த தவறியுள்ளது. வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.
சந்தையில் அரிசி, தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வு வழங்கும் நோக்கில், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ரணில் விக்ரமசிங்க ஏற்பாடு செய்திருந்தார்.
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
தற்போதைய அரசாங்கம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்தது.
ஆனால் இன்று அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கனவாகிவிட்டது. எரிவாயு, மின்சாரம், வரி குறைக்கப்படும் என மக்களுக்கு வாக்குறுதி அளித்தாலும் மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைத்ததாக தெரியவில்லை. அதற்கான வேலைத்திட்டம் எதுவும் இல்லை.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக, மக்கள் நாளுக்கு நாள் கடனாளிகளாக மாற்றப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |