ஊழல், மோசடிகளை மறைக்க அரசாங்கம் தீவிர முயற்சி : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புதிய தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை அரசாங்கம் திடீரென சமர்ப்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(19) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையி்ல், அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் சனல் நான்கு காணொளி உள்ளிட்ட சமூக ஊடக அறிக்கைகளை தணிக்கை செய்யும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
சர்வாதிகார ஆட்சி
அத்தோடு ரஷ்யா, சீனா, வடகொரியா போன்ற நாடுகளை போன்று சமூக ஊடகங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தி சர்வாதிகார ஆட்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அரசின் ஊழல், மோசடிகள் குறித்த தகவல்களை பொதுமக்களிடம் இருந்து மறைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது, என குற்றம்சாட்டியுள்ளார்.