ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு வெளியிட்ட அறிவிப்பு
goverment
employes
permanat
By Sumithiran
உள்ளுராட்சி மன்றங்களில் ஒப்பந்த, சமயாசமய, பகுதிநேர அடிப்படையில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களில் தற்சமயம் நிரந்தர நியமனம் பெறாத, இவ்வாறான எட்டாயிரம் ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு பிரதமர் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மக்கள் சார்பு அரசாங்கம் என்ற ரீதியில் எந்தவொரு சவால் ஏற்பட்டாலும், மக்களுக்காக தீர்மானம் எடுக்க அரசாங்கம் பின்நிற்காது என்றும், இது தொடர்பான யோசனையை நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி