காலைவேளை தூக்கத்தில் இருந்து எழும்பும் போது வரவுள்ள விசேட செய்தி
"காலைவேளை நித்திரை விட்டு எழும்போது அரசாங்கம் கவிழ்ந்ததாக விசேட செய்தி வரும்" என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.
பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தில் உள்ள பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வௌியேற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சிலர் உடனடியாக எம்முடன் இணைய விரும்பிய போதும் அதற்கு இன்னும் சிறிது காலம் கடக்க வைத்துள்ளதாக அவர் கூறினார்.
எந்தவொரு சக்தியுடனும் இணைந்து இந்த அரசாங்கத்தை விரைவில் கவிழ்ப்பதுடன் காலை விடிந்து எழும்பும் போது இரவு அரசாங்கம் கவிழ்ந்ததாக செய்தி வரும் என குறிப்பிட்டுள்ளார்.