பதவி நீக்கப்பட்டார் தவிசாளர்- வர்த்தமானி வெளியிட்ட ஆளுநர்!
வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளரை பதவி நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண ஆளுநர் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், வடமத்திய ஆளுநர் மஹீபால ஹேரத்தினால் நேற்றைய தினம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தவிசாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர் பிரியந்த காவிந்த அபேசூரியவினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட சில குற்றங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டமைக்கு அமைய அவர் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சமன் விக்ரமராச்சி சமர்ப்பித்த விசாரணை அறிக்கையின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.