மாகாண சபைத் தேர்தல் குறித்து அரச தரப்பின் அறிவிப்பு!
மாகாண சபைத் தேர்தலைச் சாத்தியமான வகையில் விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பாக, இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
நாடாளுமன்றில் நியமிக்கப்பட்டுள்ள குழு
இந்த ஆண்டில் நாடாளுமன்றம் சட்டமியற்றி, எல்லை நிர்ணயப் பணிகளைச் செய்து தந்தால், ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.

மாகாண சபைத் தேர்தலை நடத்தப்போவதில்லை என்ற எண்ணம் இல்லை. நாடாளுமன்றில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அந்த நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்.
தேர்தலை நடத்துவதற்கான சட்டம் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது. சட்டத்தை நாம் விரைவாக நாடாளுமன்றில் நிறைவேற்ற வேண்டும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |