ஆட்சியை பெற்றதும் சட்டவிரோத நிதிச் சொத்துக்களை குவித்துள்ள அரசாங்க எம்.பிக்கள்
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தங்களது வறுமையைப் பற்றிப் பேசி மக்களின் அனுதாபத்தைப் பெற முயன்ற சில அமைச்சர்கள், தற்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுடன் கோடீஸ்வரர்களாக ஆகியுள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர் தங்களது உள்ளாடைகளில்கூட ஓட்டைகள் இருப்பதாகக் கூறியவர்கள், தற்போது ஆடம்பர மாளிகைகளையும் சட்டவிரோத நிதிச் சொத்துக்களையும் கூட குவித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய ராஜித சேனரத்ன,
குறிவைக்கப்படும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
தற்போதைய அரசாங்கத்தின் பல அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பான பின்வரும் உண்மைகளை வெளிப்படுத்தினார். ஒரு அமைச்சர் இன்று இரண்டு வீடுகளைக் கட்டுகிறார்.

அவற்றில் ஒன்று மூன்று மாடிகளைக் கொண்ட ஆடம்பர மாளிகை. மற்றொரு அமைச்சர் தனது மகளின் பெயரில் இரண்டு நிலங்களை வாங்கியுள்ளார்.
மேலும், அவரிடம் கிரிப்டோகரன்சி இருப்பதாக அவரது சொத்து விவர அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த நாட்டில் மத்திய வங்கியே கிரிப்டோ பயன்பாட்டை அனுமதிக்காத நிலையில், ஒரு அமைச்சரவை அமைச்சருக்கு இவை எப்படி கிடைத்தன?
தனது திறமையின்மையை மூடிமறைப்பதற்காக, அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை குறிவைக்கிறது. கைது நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
ஆனால், இன்று விவசாயிகள் வீதிகளில் இறங்கியுள்ளனர். மக்களின் பசிக்கு அரசால் பதிலளிக்க முடியவில்லை.
அரசாங்கம் தனது ஊழல் நடைமுறைகளை மூடிமறைக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |