பதவி விலகிய அரச வைத்திய அதிகாரிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய பல மில்லியன்கள்
சேவையை விட்டு விலகிய அரச வைத்திய அதிகாரிகளிடமிருந்து, அரசாங்கத்துக்கு 1,277 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம் நிலுவையில் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் (National Audit Office) தெரிவித்துள்ளது.
பதவிகளை விட்டு விலகிய வைத்திய அதிகாரிகளிடமிருந்து, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு அரசினால் அறவிடப்பட வேண்டிய பிணை முறி, தண்டப் பணம் மற்றும் கடன் முன்பண நிலுவைகள் ஆகியவற்றின் மொத்தத் தொகை 1,277 மில்லியன் ரூபாய் ஆகும் என்று அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சேவையை விட்டு விலகிய வைத்திய அதிகாரிகளிடமிருந்து அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய நிலுவைகள் மற்றும் வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற விசேட வைத்திய அதிகாரிகளை நியமிப்பது தொடர்பில், விசேட கணக்காய்வு அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம் : நீதிமன்றில் கடும் வாக்குவாதம்... பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
வெளிநாடு செல்லும் வைத்திய அதிகாரிகள்
தற்போது, முதுகலை பட்டப்படிப்புப் பயிற்சிக்காகவும், வெளிநாடுகளில் வேலை செய்வதற்காகவும், மற்றும் ஏனைய காரணங்களுக்காகவும் வெளிநாடு செல்லும் வைத்திய அதிகாரிகள் சேவையை விட்டு விலகுவது மற்றும் சேவையை கைவிடுவது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காட்டுவதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்த அதிகாரிகள் பிணை முறி மற்றும் தண்டப் பணத்தை செலுத்தாமல் இருக்கும் போக்கு அதிகரித்துள்ளதாகவும், அவற்றை அறவிடுவதற்கான நடவடிக்கைகளில் பல பலவீனங்கள் இருப்பதாகவும் கணக்காய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
அத்துடன் 2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு இறுதி வரை மொத்தம் 705 வைத்தியர்கள் ஒப்பந்தத்தை மீறியுள்ளதும் இந்த கணக்காய்வின்போது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |