விவசாயிகளுக்கு அதிகரிக்கப்பட்ட உர மானியம்: வெளியான முக்கிய அறிவிப்பு
விவசாயிகளுக்கு அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை 2 கட்டங்களாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு (Ministry Of Agriculture) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல் முடியும் வரை அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.பி.எம்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உர மானிய கொடுப்பனவு
அதன்படி ஜனாதிபதியினால் அதிகரிக்கப்பட்ட உர மானிய கொடுப்பனவு தேர்தலின் பின்னர் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்திருந்தார்.
மேலும், பெரும் போக பயிர்ச்செய்கைக்காக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நீர் திறந்துவிடப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இவ் வருட பெரும் போகத்தில் 08 இலட்சம் ஏக்கர் நிலத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
