அமெரிக்காவுக்காக உளவு பார்க்கும் அரசாங்கத்தின் திட்டம்! இஸ்ரேலை மையப்படுத்தி ஹக்கிம் சரமாரி கேள்வி
இஸ்ரேலிடமிருந்து 4.26 பில்லியன் ரூபா செலவில் கண்காணிப்பு ஆளில்லா விமானங்களை (Drones) கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், போட்டி விலைமனுக்கோரல் இன்றி அவசரமாக இந்த விமானங்களை இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்வதன் பின்னணி குறித்து சந்தேகம் வெளியிட்டார்.
இந்தக் கொள்வனவில் இஸ்ரேலிய அரசாங்கத்திடமிருந்து தரகுப் பணம் பெறப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஈரானியக் கப்பல்களின் நடமாட்டம்
இந்த ஆளில்லா விமானங்கள் ஈரானியக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அமெரிக்காவுக்கு உளவுத் தகவல்களை வழங்குவதற்காகவே கொள்வனவு செய்யப்படுவதாக ஹக்கீம் குற்றம் சாட்டினார்.
“அமெரிக்கர்களுக்காக உளவு பார்க்க எமது கடற்படையையும் விமானப்படையையும் பயன்படுத்தப் போகிறோமா?” எனக் கேள்வி எழுப்பிய அவர், இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டின் வெளிவிவகார உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்த வேண்டாம் என அரசாங்கத்தை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |