பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் அநுர அரசின் நிலைப்பாடு
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பாக புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் அமைச்சரவை சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர், தற்போது நாடாளுமன்றம் ஒன்று இல்லை. எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது அல்லது திருத்துவது குறித்த நடவடிக்கைகளை எடுக்க முடியாது.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டதன் பின்னர் அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து சில தரப்பினரின் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளனர்.
மேலும் சில ஊடகங்கள் தம்மை தவறாக மேற்கோள் காட்டி, இந்த விடயத்தை விளக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிலுள்ள அரசியல்வாதிகள்
வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் கூறுவது போன்று அரசாங்கம் இந்த விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவில்லை.
தற்போதைய தருணத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தவோ அல்லது நீக்கவோ முடியாது என்றும், புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட்டவுடன், அந்த விடயம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்” என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |