ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கும்போது, சில தனிநபர்களும் குழுக்களும் அதிருப்தி அடைவது ஆச்சரியமல்ல என்று அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நேற்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சில தரப்பினர் அதிருப்தி அடைந்து, பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு, புத்தகங்களையும் பிரசுரித்து வருவதுதான், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக நடத்தப்படுகின்றன என்பதற்கு சிறந்த சான்று என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடிமகனின் கடமை
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கூட கண்டறியப்படாத தகவல் யாரிடமாவது இருந்தால், சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகனின் கடமை, அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளுக்கு வழங்குவதே ஆகும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

"ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியைக் கண்டறிதல்" என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சர் உதயன்கம்மன்பில நேற்று புத்தகமொன்றை வெளியிட்டிருந்த நிலையில், அமைச்சர் நளிந்தவின் மேற்படி கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களுக்கான தீர்வு முதல் System Change வரை...! புதைக்கப்பட்ட வாக்குறுதிகள் - பகிரங்கப்படுத்திய அலி சப்ரி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்