சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு
சிறிலங்கன் ஏர்லைன்ஸின் கடனை மறுசீரமைப்பு செய்யும் பணியை இந்த மாதம் முடிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை பிரதி அமைச்சர் ஜனிதா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
தேசிய விமான நிறுவனத்தின் தற்போதைய கடன்கள் காரணமாக, தனியார் துறையுடன் எந்த வகையான கூட்டாண்மையையும் நாடுவது சாத்தியமில்லை என்று அவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய கடன்
"எங்களிடம் மிகப்பெரிய கடன் உள்ளது. முழு விமானக் குழுவும் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான கடன்களுடன் விமான நிறுவனத்தை யார் வாங்குவார்கள்," என்று அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், கடன் மறுசீரமைப்பு முடிந்ததும் விமான நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு நிறுவனத்தை லாபகரமாக இயக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |