மாணவர்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்கப்படாது - கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
srilanka
grade 5
examination
school education
By Vasanth
வெளியாகிய தரம் 5ம் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் எந்தவித மாற்றமும் இல்லை.
இவ்வாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் எண்ணிக்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்களை பாடசாலைகளில் இணைப்பதில் பாரபட்சம் எனத் தெரிவித்து கல்வி அமைச்சுக்கு முன்பாக கடந்த வாரம் பெற்றோர் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாணவர்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்
4ம் ஆண்டு நினைவஞ்சலி