இன்று நடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களுக்கு நடந்த அநீதி!
2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த பரீட்சை தொடர்பில் சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
இந்த ஆண்டு 2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இத்தேர்வுக்கு மூன்று லட்சத்து 34,698 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
தமது பிள்ளைகள் அநீதி
கல்கமுவ கல்விப் பிரிவுக்குட்பட்ட எஹெதுவெவ பண்டாரநாயக்க தேசிய பாடசாலையின் புலமைப்பரிசில் நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் குழுவிற்கு அநீதி இழைக்கப்பட்டதாக பெற்றோர்கள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.
குறித்த பாடசாலையின் ஆசிரியரினால், வினாத்தாள் விநியோகத்தின் போது ஏற்பட்ட பிரச்சினையினால் தமது பிள்ளைகள் அநீதிக்கு இழைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நாளை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல். எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

