புலமை பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், ஆறாம் வகுப்பு மாணவர்களை சேர்ப்பதற்கான பள்ளி வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளது.
குறித்த அறிவிப்பு கல்வி அமைச்சினால் நிகழ்நிலையில் வெளியிடப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டு தரம் ஆறுக்கான மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பான தகவல்கள் அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.moe.gov.lk இல் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் https://g6application.moe.gov.lk/ ஐப் பார்வையிடுவதன் மூலம் மாணவர்கள் ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளையும் சரிபார்க்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உரிய தகவல்
மாணவர்கள் தமது பெறுபேறுகளுக்கு ஏற்ப தமக்குக் கிடைத்துள்ள பாடசாலை எது என்பதனை அறிந்துகொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகவலை பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எனவே, தரம் ஆறிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள், மேற்குறிப்பிட்ட இணையத்தளங்களைப் பயன்படுத்தி உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்த்ககது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
2 நாட்கள் முன்