மொட்டுக் கட்சி ஆட்சிக்கு வந்ததும்..! சூளுரைக்கும் நாமல்
சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்ததும் தேசிய வளர்ச்சியை நோக்கமாக கொண்ட பொருத்தமான கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பொருத்தமற்ற குறிப்புகள்
அதன்படி, புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறாம் வகுப்பு ஆங்கில மொழி தொகுதியில் பொருத்தமற்ற குறிப்புகள் இருப்பதாகக் கூறப்படும் சர்ச்சை குறித்து அரசாங்கத்துடன் விவாதிக்க எதுவும் இல்லை என நாமல் கூறியுள்ளார்.

அத்தோடு, சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தை தொகுதியில் சேர்ந்தமைக்கு யார் பொறுப்பு என்பதை பிரதமரும் சம்பந்தப்பட்ட பாட அமைச்சரும் அறிந்திருப்பதாகவும் நாமல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கல்வி சீர்திருத்தங்கள்
எனவேதான், ஆறாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் தவறான உள்ளடக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளதை இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மொட்டுக் கட்சி என்ற முறையில் இலங்கை கலாச்சாரத்தை சேதப்படுத்தும் முயற்சிகளை தாங்கள் எதிர்த்தாகவும் நமது நாட்டிற்குப் பொருந்தாத கல்வி சீர்திருத்தங்கள் தேவையற்றவை என்று தாங்கள் தொடர்ந்து கூறி வருவதாகவும் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, வெளிநாடுகளிலிருந்து நகலெடுக்கப்பட்ட சீர்திருத்தங்கள் அல்ல, நமது சொந்த சமூக மற்றும் கலாச்சார சூழலுக்கு ஏற்ற கல்வி சீர்திருத்தங்கள் இலங்கைக்குத் தேவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |