கிராம சேவகரின் பாரிய மோசடி அம்பலம்
போலி ஆவணங்களை தயாரித்து மாணவர்களை பாடசாலையில் சேர்க்க உதவிய கிராம சேவகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி தர்மசோக மாவத்தையை சேர்ந்த 45 வயதுடைய தெய்யன்னேவெல பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவகரே கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிராமசேவகர் கைது

கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அளித்த முறைப்பாட்டை அடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய குறித்த கிராமசேவகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரின் உத்தியோகபூர்வ பெயர், பதவி மற்றும் அமைச்சின் கடித தலைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து கண்டி பிரதேசத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் 29 சிறுவர்களை சேர்த்து மோசடி செய்துள்ளதாக இவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை

போலி ஆவணங்களை தயாரித்து, தவறான தகவல்களை பதிவு செய்து, சான்றிதழ் வழங்கிய குற்றச்சாட்டில் கிராம சேவகர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட கிராமசேவகர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 7 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்