தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்துள்ள கிராம சேவகர்கள்
நாடளாவிய ரீதியில் பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் இன்று (06) மற்றும் நாளையும் (07) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சுகயீன விடுமுறையை அறிவித்து நாடளாவிய ரீதியில் கடமைகளில் இருந்து விலகி, தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜெகத் சந்திரலால் (jagath chandralal),
கடும் நடவடிக்கை
''கிராம உத்தியோகத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சங்கங்களும் இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
'பொறுத்தது போதும்' என்ற தொனிப்பொருளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் எமது பிரச்சினைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தாவிடின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |