மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்
இன்று (14) முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு சுகவீன விடுமுறையை அறிவித்து சேவையில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் நந்தன முனசிங்க (Nandana Munasinghe) குறிப்பிட்டுள்ளார்.
சுகவீன விடுமுறை
கிராம உத்தியோகத்தர்களின் சேவையை அரசியலமைப்பில் அங்கீகரித்தல், சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த சேவைப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னதாக கிராம உத்தியோகத்தர்கள் கடந்த 06 மற்றும் 07 ஆகிய இரு நாட்களும் சுகவீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை நாட்டில் உள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |