புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு : பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கும் பரிந்துரைகளின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் (Examinations Department) தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், குறித்த நடவடிக்கைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amit Jayasundara) தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் இருந்து பல கேள்விகள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) ஆரம்பிக்கப்பட்ட விசாரணையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை
மூன்று கேள்விகள் உண்மையாகவே கசிந்திருப்பதை உறுதி செய்த தேர்வுத் துறை, இந்தக் கேள்விகளுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உட்பட 54 நபர்களினால் நேற்று (15) உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், தேர்வு முடிவுகள் வெளியாவதைத் தடுக்க இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், முதல் தாளை ரத்து செய்யக் கோரியும் மற்றும் மறுதேர்வு நடத்தக் கோரியும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |