பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மாபெரும் தமிழ் புத்தக கண்காட்சி
பிரித்தானியாவில் தமிழர்களுக்கென பிரத்தியேகமாக தமிழ் புத்தக கண்காட்சி நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.
இந்த கண்காட்சி இன்றையதினம் (17.06.2023) மற்றும் நாளையதினம் (18.06.2023) காலை 11 மணி தொடக்கம் இரவு 7.30 வரை நடைபெறவுள்ளது.
500 க்கும் மேற்பட்ட தலைப்புகளுடன் தமிழில் உள்ள முக்கிய புத்தகங்களுடன் இரண்டு நாட்கள் இந்த கண்காட்சி நிகழ்வு இடம்பெறவுள்ளது.
நல்ல வாய்ப்பு
எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள் தங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும், வாசகர்களை சந்திப்பதற்கும், மற்றும் நூல்களை அறிமுகப்படுத்தவும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாசகர்கள், செயற்பாட்டாளர்கள், மொழி ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நூலாசிர்களுக்கு நல்ல வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பல எழுத்தாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக இந்த நூல் கண்காட்சி நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும், சிறுவர்களுக்கான தமிழ் வாசிப்பையும், கற்றலையும் ஊக்குவிக்கும் நூல்களும் அவர்களுக்கான சிறப்பு நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இதுமட்டுமன்றி நூலறிமுகம், எழுத்தாளர் உரைகள், கவிதை வாசிப்பு, நாடக அளிக்கைகளும் உள்ளன.
இதேவேளை வாசகர்களுக்கு எந்த வகையான நூல்கள் தேவையோ அதனை முன்கூட்டியே அறிவித்தால் இந்த நிகழ்வின் மூலமாக பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு
கண்காட்சி நடைபெறும் இடம் - London Tamil Book Fair. Grand View Hall, UNIT 1, 10 Stonefield Way, Ruislip HA4 0JS.
தொடர்புகளுக்கு 07817262980 (தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ்அப்).
இது தொடர்பிலான மேலதிக தகவல்களைப் பெற uchchi.com
இணை அழுத்தவும்.
