தினமும் கிரீன் டீ குடிப்பவரா நீங்கள்: கட்டாயம் இதை தெரிந்துகொள்ளுங்கள்!
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பல விதமான முயற்சிகளை மேற்கொள்வர் அதிலும் மிக முக்கியமாக கிரீன் டீயை அதிகமாக பருகுவார்கள்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கிணங்க கிரீன் டீ அதிகம் குடிப்பதன் மூலம் தீமைகளும் உண்டு.
கிரீன் டீயை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும். கிரீன் டீயை அதிகமாக உட்கொண்டால், வயிற்று எரிச்சல், பிடிப்புகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதோடு அதிகமாக குடிப்பதால், வயிற்றில் அமிலம் உருவாகத் தொடங்குகிறது.
கிரீன் டீ
இது வயிற்றுப்போக்கு அபாயத்தையும் ஏற்படுத்துவதோடு குடல் நோய் உள்ளவர்கள் க்ரீன் டீயை அருந்தவே கூடாது என கூறப்படுகின்றது.
மேலும் அதிகமாக கிரீன் டீயில் காஃபின் என்ற பதார்த்தம் உள்ளதால் தலைவலி ஏற்படும். மற்றும் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிப்பது நல்லதல்ல எனவே, கிரீன் டீயை ஏதாவது சாப்பிட்ட பின்னரே உட்கொள்ள வேண்டும் என கூறப்படுகின்றது.
ஏற்படும் தீமைகள்
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தேவைக்கு அதிகமாக க்ரீன் டீயை அருந்தக்கூடாது.
கிரீன் டீயை அதிகமாக உட்கொண்டால்,உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம். இது தவிர, உங்கள் பசியும் குறைகிறது, இதன் காரணமாக உங்கள் உடலும் பலவீனமடையக்கூடும்.
ஒரு நாளைக்கு 3 முதல் 4 தடவைகள் க்ரீன் டீ குடித்தால் ஆபத்து ஏற்படகூடும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |