அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி
அமெரிக்காவில் வணிக ஜெட் விமானமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
வட கரோலினாவில் உள்ள ஸ்டேட்ஸ்வில்லே பிராந்திய விமான நிலையத்தில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பயங்கர சத்தம்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விமான நிலையத்திலிருந்து புளோரிடாவை நோக்கி காலை 10.06 மணியளவில் விமானம் புறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சுமார் 2000 அடி உயரத்தை விமானம் அடைந்த போது திடிரென ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு விமானம் திரும்பியுள்ளது.

இதையடுத்து, விமானம் அவசரமாகத் தரையிறங்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இந்தநிலையில், ஓடுபாதையைத் தாண்டிச் சென்று ஆண்டெனா மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதி பயங்கர சத்தத்துடன் விமானம் வெடித்துச் சிதறியுள்ளது.
இதையடுத்து, குறித்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில் விமானம் தீப்பந்து போல மாறியதில் அதில் பயணித்த ஏழு பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஓய்வுபெற்ற நாஸ்கார் (கார் பந்தயம்) சாம்பியனான கிரெக் பிஃபிள் (55), அவரது மனைவி கிறிஸ்டினா அத்தோடு குழந்தைகளான ரைடர் மற்றும் எம்மா ஆகியோரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
புலம்பெயர்தலின் வழியாக ஈழப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்கள்… 16 மணி நேரம் முன்