சிறிலங்காவில் மரண ஒலிக்கு சாத்தியம் - புலம்பெயர் தேசத்தில் இருந்து வந்த அறிக்கை
சிறிலங்கா தனது எதிர்மறையான பாதையைத் தொடர்ந்தால், நாடு பெரும் விலையை கொடுக்க நேரிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமென, புலம்பெயர் தமிழர்களின் அமைப்புக்களில் பலம்வாய்ந்த ஒன்றாக கருதப்படும் உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
சர்வதேச சமூகம் சிறிலங்கா தொடர்பான தனது ஈடுபாட்டு அணுகுமுறையை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது எனவும் உலகத் தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.
ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் அல்லது அதன் பன்முகத்தன்மையை வளர்ப்பது போன்ற எதிர்மறையான பாதையைத் தொடர்ந்தால், நாடு பெரும் விலையை கொடுக்கும் என்பதை சிறிலங்கா புரிந்து கொள்ள வேண்டுமென உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, சர்வதேச சமூகத்தின் தலைவர்கள், குறிப்பாக சர்வதேச சட்டத்தை பின்பற்றுவதை கண்ணியமான மற்றும் நாகரிக உலகிற்கு ஒரு மூலக்கல்லாக கருதுபவர்கள், அடித்தளத்தை அப்பட்டமாக மீறும் சிறிலங்காவின் தலைவர்களுடன் நேரடி ஈடுபாட்டிலிருந்து விலகி இருக்க வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காத் தலைவர்கள் நேர்மையான தலைமைகளுக்கு உரிய மரியாதை வழங்குவதோடு, மரியாதையைப் பெறுவது நல்லது என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் (Gotabaya Rajapaksa) ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற அரச தலைவரது செயலணியின் தலைமைப் பதவியை கலகொட அத்தே ஞானசார தேரருக்கு (Galagoda Aththe Gnanasara) வழங்கியமை மிகவும் கவலையளிக்கும் ஒரு நிகழ்வு என அதில் கூறப்பட்டுள்ளது.
செயலணியில் சில முஸ்லிம் பிரதிநிதிகள் காணப்படுகின்ற போதிலும், தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் சிறுபான்மை சமூக பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்காமல் இந்தச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் இரட்டைத் தோல்விகளுக்கு இது ஒரு தெளிவான எடுத்துக்காட்டு எனவும், பன்மைத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்காமல், வழக்குத் தொடர்வதில் இருந்து உறுதியான விலக்கு, தற்போதைய நிர்வாகத்தின் தனிச்சிறப்புகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கீழ், சிறிலங்காவின் பாரம்பரிய ஜனநாயக பொறிமுறைகளை புறக்கணித்து, செயலணிகள் மூலம் சிறிலங்கா அதிகளவில் ஆளப்படுவதாக உலகத் தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நல்லிணக்கத்திற்கான மரண ஒலியாக இருப்பதோடு எதிர்காலத்தில் மனக்கசப்பு மற்றும் மோதல்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச சமூகம் இந்த உண்மையை உணர்ந்து, சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு பயனுள்ள இருதரப்பு நடவடிக்கைகள் உட்பட அதன் முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறு உலகத் தமிழர் பேரவை அந்த அறிக்கையின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளது.