பிரான்ஸில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் புகுந்த கார்: பலியான மக்கள்
பிரான்ஸில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கார் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி பத்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட குவாடலூப் தீவில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மீட்பு படையினர்
குறித்த தேவாலயத்திற்கு எதிரே உள்ள ஷோல்ச்சர் சதுக்கத்தில் இந்த நிகழ்ச்சிக்காக ஏராளமானோர் கூடியுள்ளனர்.
அப்போது கூட்டத்திற்குள் கார் ஒன்று அதிவேகமாக புகுந்த நிலையில் மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.

இதையடுத்து, கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் பத்து பேர் பலியாகியுள்ளனர்.
அத்தோடு, ஒன்பது பேர் காயம் அடைந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
இதையடுத்து, காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |