அரச நிறுவனங்களுக்கான வழிகாட்டலை வெளியிடவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு
இலங்கையில் உள்ள அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டல்களை வெளியிடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, காவல்துறை, சிறைச்சாலை, நன்னடத்தை நிலையம் ஆகியன தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள சிறைச்சாலைகள் மற்றும் நன்னடத்தை நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மரணிக்கும் சம்பவங்கள் அண்மை நாட்களில் அதிகரித்திருந்தன.
காவல்துறையினரின் தாக்குதல்கள்
காவல்துறையினரின் தாக்குதல்களில் குறித்த தரப்பினர் உயிரிழந்துள்ளதாக, உயிரிழந்தோரின் குடும்பங்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில், நபரொருவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் செயற்பட வேண்டிய விதம், உளநலம் பாதிக்கப்பட்ட நபரை வழிநடத்தும் விதம் மற்றும் சிகிச்சை அளித்தல் என்பன குறித்த வழிகாட்டல்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் வெளியிடப்படவுள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்