அதிபரின் வழிகாட்டலின் கீழ் நாட்டில் முதலீடு செய்ய பல வேலைத்திட்டங்கள்!

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lanka
By Sathangani Jul 31, 2023 04:51 AM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் வர்த்தக வசதிகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்கும் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதலீட்டாளர்களுக்கு உள்ள தடைகளை நீக்கி, நாட்டில் வர்த்தகம் மேற்கொள்வதை எளிதாக்கும் வகையில் சட்டம் கொண்டு வர எதிர்பார்க்கப்படுவதாகவும், முதலீடு மற்றும் வியாபாரத்தை ஊக்குவிப்பதில் அதிகாரவர்க்க ஆட்சி பாரிய தடையாக உள்ளது என சுட்டிக்காட்டிய அவர், நிர்வாக செயற்பாடுகளுக்கு அரச சேவை முகாமைத்துவ கொள்கையே தேவை எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் பரிந்துரைகள்

அதிபரின் வழிகாட்டலின் கீழ் நாட்டில் முதலீடு செய்ய பல வேலைத்திட்டங்கள்! | Guidance Of Ranil To Invest Many Programs Srilanka

மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே,

''வர்த்தக வசதிகள் மேம்படுத்தல் குறிகாட்டியில் இன்று நாம் 99ஆவது இடத்தில் இருக்கிறோம். இதனுடன் தொடர்புள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி பணிகளை மேற்கொள்வதற்கு அதிபர் எமக்கு பூரண சுதந்திரம் வழங்கியுள்ளார்.

அத்துடன், இது தொடர்பில் அதிபர் செயலணியொன்று தற்போது செயற்பட்டு வருகின்றது. நாடாளுமன்றம் வழங்கிய பொருத்தமான பரிந்துரைகள் உடனடியாகவும், நடுத்தர மற்றும் நீண்ட காலத்திலும் செயல்படுத்தப்படும்.

நாட்டில் இயங்கும் அனைத்து நிறுவனங்களையும் ஒரே கட்டமைப்பில் பதிவு செய்தல், ஒவ்வொரு நிறுவனத்தாலும் தரவு மற்றும் தகவல் அமைப்புகளைப் பேணுதல் மற்றும் தகவல்களை ஒரே தரவு அமைப்பில் பேணுதல் போன்ற வேலைத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

முதலீடுகளை ஊக்குவித்தல்

குறிப்பாக, நாட்டில் வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் சட்டம் கொண்டு வர எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர் ஒருவர் நாட்டுக்கு வரும் போது , ​​சம்பந்தப்பட்ட துறையில் முதலீடு செய்வதற்கு ஏற்ற காணி எங்குள்ளது என்பதைத் துல்லியமாக அறியும் தரவுக் கட்டமைப்பு இன்னும் நம் நாட்டில் இல்லை. ஆனால் இந்தியாவில் காணி தொடர்பான தரவுத் தகவல் வங்கி உள்ளது. நாமும் அத்தகைய திட்டத்திற்கு செல்ல வேண்டும்.

மேலும், முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் சட்ட கட்டமைப்பு நம் நாட்டில் இல்லை. முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெறுவதற்கு கடந்த அரசாங்கம் வணிக உயர் நீதிமன்றங்களை நிறுவியது.ஆனால், எதிர்பார்த்தபடி, தேவை பூர்த்தியாகாததால், முதலீட்டாளர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

நம் நாட்டில் உள்ள பெரும்பாலான அரச அதிகாரிகளுக்கு நிர்வாக மனப்பான்மையே தவிர முகாமைத்துவ மனப்பான்மை இல்லை. எனவே, அரச அதிகாரிகளுக்கு தொழில்முயற்சி குறித்து பரவலாக அறிவூட்ட வேண்டிய தேவையும், நிர்வாகத்திற்கு பதிலாக முகாமைத்துவ அரச சேவையின் தேவையும் எழுந்துள்ளது.

கேபிள் கார் திட்டம் 

அதிபரின் வழிகாட்டலின் கீழ் நாட்டில் முதலீடு செய்ய பல வேலைத்திட்டங்கள்! | Guidance Of Ranil To Invest Many Programs Srilanka

2018 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்தில் உள்ள பிரபல கேபிள் கார் நிறுவனம் எமது நாட்டில் கேபிள் கார் திட்டமொன்றை ஆரம்பிக்க முன்வந்தது. அதற்கான 3 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்தத் திட்டத்திற்கு 15 நிறுவனங்களின் அனுமதியைப்பெற வேண்டியிருந்தது.

ஆனால் இதே திட்டம் நேபாளம் மற்றும் டொமினிக் குடியரசு என்பவற்றுக்கும் கிடைத்தன. அங்கு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 65 மில்லியன் டொலர் பெறுமதியான இந்தத் திட்டத்திற்கு இன்னும் நமது நாட்டில் அனுமதி கிடைக்கவில்லை.

இது போன்ற  பிரச்சினைகளை அடையாளங்கண்டு அதிபர் செயலணியுடன் இணைந்து தீர்வு காண அதிபர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். இனங்காணப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கி நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் செப்டம்பர், ஒக்டோபர் மாதமளவில் இந்த செயற்பாடுகளை நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது'' என்றார்.  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025