வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்! 7 முறை துப்பாக்கிச் சூடு: கொழும்பில் பதற்றம்
கொழும்பின் புறநகர் பகுதியான அதுருகிரிய, கல்வருஷாவ வீதியில், உள்ள வீடொன்றின் மீது சிலர் தொடர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (27) அதிகாலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் வசிக்கும் குற்ற கும்பலுக்கு தலைமை தாங்கும் முத்துவா என அழைக்கப்படும் தனுக அமரசிங்கவின் வீட்டின் மீது தொடர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
7 முறை துப்பாக்கிச் சூடு
வீட்டின் மீது சுமார் 7 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரியவருகின்றது.
துப்பாக்கிச்சூட்டில் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துருகிரிய மற்றும் நவகமுவ பிரதேசங்களில் இடம்பெற்ற பல குற்றச்செயல்கள் முத்துவாவின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 54 நிமிடங்கள் முன்