நிவிதிகல பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
நிவிதிகல காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாதகட பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், திக்கோவிட்ட வத்த பாதகட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, காயமடைந்தவர் திருமணமானவர் என்பதுடன் குறித்த நபர் தனது மருமகனுடன் வீட்டு முற்றத்தில் இருந்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இனந்தெரியாத துப்பாக்கிதாரி
இதனடிப்படையில், முகத்தை மறைத்த நிலையில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரே துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் நிவித்திகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லையெனவும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
