தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு : மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே காரணம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
Gun Shooting
By Thulsi
கொழும்பு (Colombo) புறகநகர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று (25) அதிகாலை வெல்லம்பிட்டி, கிட்டம்பஹவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விடுதியில் தங்கியிருந்த இரண்டு பேரைக் குறி வைத்து, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 18 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்