ரணிலின் கைது சிறிய பிரச்சினை: எம்மை எதுவும் செய்ய முடியாது - பிமல் ரத்நாயக்க எக்காளம்

Vavuniya Ranil Wickremesinghe Bimal Rathnayake Ranil Wickremesinghe Arrested
By Thulsi Aug 25, 2025 02:58 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) யூலைக் கலவரம், யாழ். நூலக எரிப்பு போன்ற சம்பங்கள் இடம்பெற்ற காலப்பகுதியிலேயே கைது செய்திருக்க வேண்டும். தற்போது நடந்த விடயம் சிறிய பிரச்சினை தான் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியா (Vavuniya) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ரணில் விக்ரமசிங்கவின் கைது நடவடிக்கையானது ஒரு அரசாங்க பழிவாங்கல் அல்ல.

ரணிலை உடனடியாக விடுதலை செய்யுங்கள் : வெளிநாட்டிலிருந்து வந்த அவசர கோரிக்கை

ரணிலை உடனடியாக விடுதலை செய்யுங்கள் : வெளிநாட்டிலிருந்து வந்த அவசர கோரிக்கை

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி

நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு அமைய நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே அது இடம்பெற்றது.

ரணிலின் கைது சிறிய பிரச்சினை: எம்மை எதுவும் செய்ய முடியாது - பிமல் ரத்நாயக்க எக்காளம் | Bimal Rathnayake Abt Ranil Wickremesinghe Arrest

இதுவரை காலமும் இந்தநாட்டில் சாதாரண மக்களுக்கு மாத்திரமே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் எமது ஆட்சியில் யார் எவர் என்ற தராதரம் பாராது, அனைவருக்கும் சமமான வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

தற்போது இதற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் குப்பைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளது. ஆனால் அவர்களால் அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது.

தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாதவர்கள், மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களே இன்று, ஒன்று சேர்ந்துள்ளனர். ரணிலின் காலத்தில் யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது, கறுப்பு யூலை கலவரம் இடம்பெற்றது.

ரணிலை நலம் விசாரிக்க விரைந்த டக்ளஸ் தேவானந்தா

ரணிலை நலம் விசாரிக்க விரைந்த டக்ளஸ் தேவானந்தா

பட்டலந்தை அறிக்கை

அந்தக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் வவுனியா, செட்டிகுளம் பகுதிகளிற்கு இடம்பெயர்ந்திருந்தார்கள்.

ரணிலின் கைது சிறிய பிரச்சினை: எம்மை எதுவும் செய்ய முடியாது - பிமல் ரத்நாயக்க எக்காளம் | Bimal Rathnayake Abt Ranil Wickremesinghe Arrest

அத்துடன் பட்டலந்தை அறிக்கை தொடர்பாக அனைவருக்கும் தெரியும். எனவே அந்த காலப்பகுதியில் தான் இவரை கைதுசெய்திருக்க வேண்டும்.

இது சின்ன விடயம் தான். ஆனால் எதிர்காலத்தில் மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி ஊழல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அத்துடன் ஊழல்வாதிகள், அரச பணத்தை மோசடிசெய்தவர்கள் மீது தொடர்ச்சியாக சட்டம் பாயும்.

காவல்துறையினர் சுதந்திரமான வகையில் தங்களது கடமைகளை செய்வதற்கான சூழல் தற்போது ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் அரசு என்ற வகையில் காவல்துறையினருக்கு எந்தவிதமான அழுத்தங்களையும் வழங்கவில்லை என நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

ரணில் கைதை முன்னரே கூறிய யூடியூப்பருக்கு விழுந்த பேரிடி

ரணில் கைதை முன்னரே கூறிய யூடியூப்பருக்கு விழுந்த பேரிடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026