காலி - கொஸ்கொடவில் இரண்டு சந்தேக நபர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு
காலி மாவட்டத்தில் கொஸ்கொட, மஹஇந்துருவ பகுதியில் கொலைச் சம்பவம் ஒன்றை மேற்கொள்ளச் சென்றதாக சந்தேகிக்கப்படும் இருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் தகவலின்படி, ‘லொக்கு பெட்டி’ தரப்பைச் சேர்ந்த துப்பாக்கிச் சூட்டாளர் ஒருவர் ‘கரந்தெனிய சுத்தா’ தரப்பைச் சேர்ந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
வலான ஊழல் தடுப்பு பிரிவினர்
துப்பாக்கிச் சூட்டாளர்கள் காவல்துறையினரிடம் சிக்கிய பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வலான ஊழல் தடுப்பு அதிரடிப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ‘லொக்கு பெட்டி’ என அழைக்கப்படும் குற்றச்செயல் சந்தேகநபரின் சகோதரரான ‘பொடி பெட்டி’ கடந்த முதலாம் திகதி அஹுங்கல்ல, வெலிகந்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தார்.
அவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் நடந்தே வந்து, சம்பவத்தின் பின்னர் நடந்தே தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
அந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ‘லொக்கு பெட்டி’ தரப்பினர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்த வந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |