தென்னிலங்கையில் மீண்டுமொரு துப்பாக்கி சூடு - ஒருவர் பலி
தெற்கு தலங்கம கொரேபா பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தலங்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று (25) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
43 வயதுடைய ஜனக புஷ்பகுமார என்ற நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பண்டி நாமத்த என்பவரின் வீட்டிற்கு முன்பாக நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காவல்துறை விசாரணை

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்
இந்த சம்பவம் தொடர்பில் தலங்கம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தென்னிலங்கை பகுதிகளில் அதிகமான துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களும் வாள்வெட்டு சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 10 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்