தப்பிச்செல்ல முயன்ற கைதி மீது துப்பாக்கிச் சூடு - காவல்துறை வெளியிட்ட தகவல்..!
Sri Lanka Police Investigation
Death
By Dharu
கேகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பிச்செல்ல முயற்சித்த ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
சமையல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர் இன்று (08) அதிகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த சந்தேகநபர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு

மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், பராமரிப்பு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந் சந்தேகநபர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி