கொழும்பில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ள நிலையில்,அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, கொழும்பு, பொரளை மெகசீன் சிறைச்சாலைக்கு முன்பாகவுள்ள ஆனந்த ராஜகருணா அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் துப்பாக்கிச்சூடு
மேலும், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 38 வயதுடையவர் ஆவார்.
குறித்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் எனவும் அவர் சில நாட்களுக்கு முன்னர் விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |