பௌத்த துறவி வேடத்தில் துப்பாக்கிதாரியை அனுப்பத் திட்டமிட்ட கெஹல்பத்ர: நீதிமன்றில் அதிர்ச்சி
பாதாள உலகப் தலைவரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை முன்னெடுக்க மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பில் நீதிமன்றில் முக்கிய விடயங்கள் அம்பலமாகியுள்ளது.
இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான பதுவத்த சமரவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிவந்த விடயங்களை நீதிமன்றுக்கு அறிவித்த கொழும்பு குற்றப் பிரிவு (CCD) மேற்கண்ட விடயத்தை விளக்கியுள்ளது.
இதன்படி கணேமுல்லா சஞ்சீவவைக் கொலை செய்வதற்காக, துப்பாக்கி ஏந்திய நபரை ஒரு பௌத்த துறவி வேடத்தில் நீதிமன்றத்திற்கு அனுப்ப கெஹல்பத்ர பத்மே ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது என CCD நீதிமன்றுக்கு முக்கிய திட்டப்பின்னணியை வெளிப்படுத்தியுள்ளது.
பதுவத்த சமரவின் அறிவுறுத்தல்
இருப்பினும், சற்தேகநபரான பதுவத்த சமரவின் அறிவுறுத்தல்களின் பேரில் அசல் திட்டம் முற்றிலும் மாற்றப்பட்டதாக விளக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்தியவர் சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்ததாகவும் புலனாய்வாளர்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி எனக் கூறப்படும் பதுவத்த சமர, அஜர்பைஜானில் கைது செய்யப்பட்டு, 2026 மே 10 அன்று இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதற்கமைய தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |